வணக்கமுங்க... நமக்கு ஊரு கோவைப் பக்கம்... வளர்ப்பு சிங்காரச் சென்னை ... பொளப்பு சுத்திகிட்டே இருக்கேன்... இப்போ அமெரிக்கா... அப்பறம் எங்கேன்னு யாருக்கு தெரியும்... கை அரிப்பு தாங்கல.. அதான் கிறுக்கி இருக்கேன்...
தழும்பு
காதலின் விதைகளை
விழிகளில் விதைத்துச் சென்றவளே
கண்ணீரை உரமாக்கி நான் வளர்த்த
என் கனவுகள் இருண்டதடி
இமைகளில் உனை அடைக்க நினைத்தேன்
அன்றே சிறைப்பட்டவன் நானடி
சிந்திய ஒரு புன்னகையில்
சிதறிய என் நெஞ்சை
என்றாவது நீ அறிவாயென்றால்
அன்றுவரை நான் பித்தனாய்.....
*******************************************************************
நம்ம பசங்க சிலர் இப்படித்தான் சுத்துறதா கேள்வி .... :P
அப்பப்போ இப்படி எதாவது கிறுக்குவேன்... உங்கள் திட்டுகள் kanyabp@gmail.com... பாராட்டு.. ஹிஹி.. இங்கயே கொடுக்கலாம்...
நன்றி.. சொல்லிக் கொண்டே இருப்பேன்...
7 comments:
aaaahha naan pettradhu pennai adhu indru aanagavum sindhikkiradhe
idhe madhiri aanum pennai sindhikka un eluthu udhavattum
by amma
கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது
பதிவுலகத்துக்கு காலடி வெச்சதுக்கு ஒரு கும்பிடுங்க. நமக்கும் கொங்கு மண்டலம்தானுங்க. கவிதையெல்லாம் நல்லாவே எழுதறீங்க.
எங்க சங்கம் பக்கம் பார்த்துடே இருங்க ஒரு போட்டி வைககப்போறோம்
அட! கவிதை நல்லா இருக்கே!
பித்தனாய், இந்த காலத்து இளைஞர்கள் இல்லை...
உதாரணம் - இந்த சுட்டி.
http://maheshan.blogspot.com/2007/05/blog-post.html
epdi eppadi eallam ? kutties kalakita po
கன்யா, நீங்கள் ஆணா பெண்ணா? புகைப்படத்தை பார்த்தால் பெண் போல் தெரிகிறது. ஆனால் கவிதையில் ஒரு ஆணின் பிதற்றல் அல்லவா இருக்கிறது.
Post a Comment