Tuesday, October 20, 2009

பத்திரிக்கை சுதந்திரம் - லாஜிக் இல்லா மேஜிக்

வணக்கம்

இன்னைக்கு நம்ம விமர்சிக்கப் போறது "செய்திகள்"

நாட்டுல நடக்குற விஷயங்களை தெரிஞ்சுக்க நிறைய வழிகள் இருக்கு. நாளேடுகள், வாரப் பத்திரிகைகள், டிவி ரேடியோ செய்திகள் இப்படி நிறைய. அதுலையும் நாட்டை விட்டு வெளியே வந்து வாழுற என்ன மாதிரி பலருக்கு அவசர அவசரமா கேட்டுட்டு ஓடுற தலைப்பு செய்திகள் ..

இன்னைக்கு காதல கூட ஒரு தலைப்பு செய்தி ..

"பெண் அதிகாரி தீ குளித்து மரணம், உளவுத்துறை விசாரணையே காரணம்"

சரி இது ஒரு செய்தி தான் ஆனா லாஜிக் இடிக்குதே..

...... உளவுத்துறை விசாரணை பண்ற அளவுக்கு எதோ தப்பு நடந்து இருக்கு. இதை பண்ண தெரிஞ்சவங்களுக்கு தப்பிக்க தெரியாத என்ன?

...... சரி அப்படியே தற்கொலை தான் தபிக்க ஒரே வழின்னு நினைச்சு இருந்தாலும், அமைதியா, அழகா சாக நிறைய வழிகள் இருக்கே. எதுக்கு கோரமா கரி கட்டை ஆகணும்?

இது மட்டும் இல்ல.. இன்னும் சில செய்திகள்..

"அனுமதி இல்லாத பட்டாசு கடை தீ பிடித்ததில் நாப்பத்தி நாலு பேர் மரணம்.. மூன்று பேர் கைது"

இங்கையும் லாஜிக் இடி படுத்து..

...... அனுமதியோட கடை வைக்கிறவனே கல்லாவை கட்டிப் பிடிச்சுகிட்டு இருப்பான். ஆனா இங்கே இப்போ கைது பண்ணி இருகாங்க!!

...... பட்டாசு கடையில எப்படி தீ பிடிச்சுது? எப்படி வேடிகிறதுன்னு வெடிச்சு காட்டினாங்கள? இல்ல பீடி பிடிச்சு போடாங்கள இப்படி எந்த விவரமும் இல்ல.

...... யாரோ அத்தனை போரையும் உள்ள வெச்சு பூட்டிட்டு பத்த வெச்ச மாதிரி இருக்கு, இப்படி மொட்டையா செய்திகள் சொன்ன என்ன அர்த்தம்

இது கூட ஒரு அளவுக்கு ஒத்துக்கலாம், ஆனா பூட்டி இருந்த இரும்பு கடை தீ பிடித்து மொத்தமா சேதம் ஆச்சாம்.. இந்த கொடுமைய எங்கே போய் சொல்ல. தீபாவளி நேரம் தான் அதுக்காக இரும்பு கூடவா?

...... ஒரு இரும்பு கடைய கற்பனை பண்ணுங்க, அங்கே ஒரு பட்டாசு தெறிச்சு விழுது. இதனால இரும்பு கடையே சேதம் ஆகுதுன்னா பட்டாசு விழுந்த இடத்துல ஒன்னு வெடி பொருள் இருந்து இருக்கணும்.. அதுக்கு வாய்ப்பு கம்மி ஏன்ன வெடி பொருள் இருந்து இருண்ட மொத்தமா வெடிச்சு சிதறி இருக்கும்... இல்ல ஒரு டிரம் நிறைய எண்ணை இருந்து இருக்கனும்... இரும்பு அடிக்க எண்ணை எதுக்கு? அட அதுவும் இல்லையா அட்லீஸ்ட் ஒரு பஞ்சு மூட்டையாவது இருந்து இருக்கனும்.. ஆனா அதுக்கு எல்லாம் இரும்பு அசைஞ்சு கொடுக்காது.

...... பூட்டி இருந்த கடை திறக்க முடியலாம் அதுனால மொத்தமா அழிஞ்சு போச்ச? ஏன் அது என்ன வேர்ல்ட் பேங்க் லோக்க்கேர்'எ போட்டு இருந்தது?

கொடுமை கொடுமைன்னு இந்த வருஷம் தீபாவளிக்கு வட நாட்டு இனிப்பு வகைகளுக்கு அதிக வரவேற்ப்பா ஒரு சிறப்பு ரிப்போர்ட் ... இது செய்திகள்'ல சொல்ற விஷயமா?

என்ன கொடுமை சரவணன் இது?

கேக்குறவன் கேனையனா இருந்தா கேழ்வரகுல கூட கிக்கு ஏருமாம!!!!

Monday, August 31, 2009

ஏன்????

கேளடி பராசக்தி

மேகங்களின் பாரம் குறைய
மழை துளி தந்தாய்
மழை துளிகள் விழுவதை தாங்க
அருவிகள் தந்தாய்

அருவிகளின் வேகம் தடைபட
நதிகள் தந்தாய்
நதிகளின் தேடல் கிடைக்க
கடல்தனை தந்தாய்

கடல்மகள் வெட்பம் தணிக்க
தழுவும் தென்றல் தந்தாய்
தென்றலின் ஈரம் எடுத்து
மேகம் தந்தாய்

நின் படைப்பில்
அனைத்துக்கும் இலக்கொன்று படைத்தாய்
அதை ஒரு வட்டத்துக்குள் வரைந்து வைத்தாய்

சொல்லடி பராசக்தி
மனிதனை மட்டும் ஏன் அலைய விட்டாய்

இன்னதென்று தெரியாது
ஒவ்வொருவருக்கும் ஓர் இலக்கு
அதை தேடித்திரிய
இருட்டில் ஒரு பாதை

தேடல் தீரும் முன்பே
தள்ளாடும் தேகம்
பயணம் முடியும் முன்பே
உயிர் விடுபடும் வேகம்

ஏன் இல்லை நிறைவு

மார்கங்களில் கிடைக்கும் என்று
மனமொத்து நாடினால்
மதம் என்ற மதம் பிடித்து
மானுடம் அழியக் கண்டேன்

ஏனடி பராசக்தி

போராடும் மனமும்
புரியாத குணமும்
முடியாத தேவைகளும்
மனிதருக்கு கொடுத்தாய்