Tuesday, June 19, 2007

சிவாஜி - ஒரு பிரம்மாண்டம்

மக்களே,

ஒரு மூணு நாலு மாசமா இந்த பக்கம் வர முடியல. சில நண்பர்களோட வலைப் பக்கம் சத்தமில்லாம எட்டிப் பார்த்துட்டு ஓடிட்டேன்... என்னடா ஆளைக் காணோம்ன்னு நினைச்சவங்களுக்கு எல்லாம்.. இதோ வந்துட்டேன்.. அப்பா ஒரு தொல்லை குறைச்சல்ன்னு நினைச்சவங்களுக்கு எல்லாம்.. கிளம்பிட்டோம்ல... :)

சரி இனி மேட்டருக்கு வருவோம். சிவாஜி பார்த்தேன். இருங்க இருங்க.. பச்சைக்கிளி முத்துச்சரம் மாதிரி திரைவிமர்சனம் எல்லாம் போடல... படம் சப்பையா இருந்தா ஏதோ மக்கள் இப்படி ஒரு படத்தைப் பார்க்காம எஸ்கேப்பிக்கட்டுமேன்னு திரைவிமர்சனம் போடலாம்... ஆனா இந்த மாதிரி படத்துக்கு போடக் கூடாது!!!

இந்த பகுதிய கொஞ்சம் வித்தியசமா எழுதப்போறேன். இப்போ சிவாஜி எப்படி இருந்துச்சுன்னு நம்ம வைகைப் புயல் வடிவேலு சொல்லப் போறார். அவர் சொல்ல சொல்ல நான் நோட்ஸ் எடுத்துகிட்டேம்பா...

***********************************************************************************

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... சொப்பா... என்ன கூட்டம் என்ன கூடடம்.. ஏம்மா கன்னியா எப்படி நம்ம தலைவர் சும்மா அசத்திப்புட்டார்ல... அது என்னவோப்பா இவருக்கு மட்டும் வயசே ஆக மாட்டேங்குது... ஹம்.. வகையா, எளசா, தினுசா ஜோடி போடுறாரு.. அதுக்கு எல்லாம் ஒரு மச்சம் வேணும்.. தார் ஊத்துன மாதிரி இருக்குற என உடம்புல மச்சம் இருந்தாலும் தெரியாது!!..

அடா அடா அடா.. என்ன ஒரு எண்டிரி கொடுக்குறாரு சிவாஜி.. அமேரிக்கா ரிட்டர்ன்னு.. அசத்தல் இங்கிலிபிஸ்.. ஆளே வாயப் பொலக்கிற மாதிரி இருக்காரே.. ஒரு பத்து பதினஞ்வி வயச முழுங்கிப்புட்டாரப்பா...

படம் ஆரம்பிச்சதுல இருந்து முடிக்கிற வரைக்கும் தொறந்த வாய நான் மூடவே இல்ல... முடியல... நம்ம சிரேயா குட்டி நம்ம தலைய கருப்புன்னு சொல்லிடுச்சேன்னு கலர் ஆகுறதுக்கு இவர் போட்ட லூட்டி.. அய்யோ அய்யோ..

பன்ச்சு டைலாக்கு கொடுக்குறாரு பாரு.. "கிடைச்சவங்கள கல்லியாணம் பண்ணிக்கிறதை விட புடிச்சவங்களை கல்லியாணம் பண்ணிக்கணுமாம" வேண்டாம்'ன்னா சொல்லப் போறேன்.. இந்த முகறக்கட்டைய போக்கிரியில என்னையவே கொரங்கு பொம்மைன்னு சொல்ல வெச்சுட்டாங்க. இந்த லச்சணத்துல புடிச்சவங்க எங்க மாட்டப் போறாங்க!!!

அது மட்டுமா, அன்னியன் மாதிரி கூட்டத்துக்கு நடுவுல சும்மா சுத்தி சுத்தி அடிக்கிறாரப்பா... பாத்த எனக்கே பல்லு கலண்டு போச்சு, வாங்குன அவனுங்களுக்கு எப்படி இருந்து இருக்கும்!! "பன்னிங்கதாண்டா கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாத்தான் வரும்"ன்னு போட்டாரு பாரு.. நம்ம அலப்பறை எல்லாம் ஒன்னுமே இல்ல!!

மொதலமைச்சர சொருகீட்டு கையெழுத்துப் போடலைன்னா கேபிள கட் பண்ணிடுவேன்னு பொரட்டிட்டு, பணத்தையாவது கொடுக்கலாமேன்னு கேட்டா, கொடுப்பேன் ஆனா ராத்தி வந்து பாதிய புடுங்கிடுவோம் மீதிய வரித்துரைக்கு போட்டுக் கொடுத்துறுவோம்'ன்னு ஆட்டைய போட்டாரப்பா...

தமிழ் நாட்டுல மட்டும் 20 லட்சம் கோடி கருப்பு பணம் இருக்குதாம்யா... இதைத்தான் ஆபீஸ் ரூம்ல வசூல் பண்ணுறாரு நம்ம பாஸ்.. இனி எவனும் ஆபீஸ் ரூம் பக்கமே போக மாட்டாய்ங்க.. (இல்லன்னா மட்டும் நம்ம பசங்க கிளிக்கிறானுங்க...)

ஒரு கார் சண்டை சீண்... கண்ணக் கட்டிருச்சப்பா!! நடுவுல ஒரு பிட்டு, நடிகர் திலகம் சிவாஜி அய்யாவோட பாட்டு, மக்கள் திலகம் என் அருமை அண்ணன் எம்.ஜி.ஆர் அய்யாவோட பாட்டு, காதல் மன்னன் கமல ஹாசனோட நேத்து ராத்தி அம்மா பாட்டு இதுக்கு எல்லாம் இவரும் சிரேயாவும் அந்தந்த காஸ்ட்டியூம் போட்டு ஆடுனது.. ஹ்ம்ம்... வையித்தெரிச்சலப் போச்சு... அது சரி, பல்லு இருக்கு பகோடா சாப்பிடுறாரு!!

காஸ்ட்டியூம்ன்னு சொன்னதும் இந்த பாட்டுக்கு எல்லாம் டிரஸ் ஒண்ணும் சரி இல்ல... என்னா ஆப் ஆகிருச்சு.. இரு இன்னும் சொல்லி முடிக்கல.. அந்த பொண்ணு என்னவோ அம்சமாத்தான் இருக்கு... ஆனா பாவம் டிரஸத்தான் ரொம்ப குட்டியா கொடுத்துட்டாங்க... ஹா பிரைட் ஆகிருச்சு.. உங்க மூச்சிதான்.. பொண்ணுக்கு சின்ன டிரஸ்ன்னு சொன்னா போதுமே... ஆனா, அந்த செட்டு, பொண்ணுங்க, சிரேயா எல்லாத்தையும் தூக்கி சாப்பிடுற மாதிரி நம்ம தலை மொத்தமா கவர் பண்ணிட்டாரு.. இன்னொரு தடவ பிகருங்கள பாக்கிறதுக்காக சிவாஜிய மறுபடியும் பாக்கணும்.

படத்துல சொல்ல வேண்டிய இன்னொரு அம்சம் நம்ம சுமனோட நடிப்பு.. அண்ணமாச்சாரியார்'ல பார்த்த சுமனா இதுன்னு நம்பவே முடியல.. என்ன வில்லத்தனம்யா..

படத்துல எல்லாமே டாப்பு... ஆனா ஒரே ஒரு புகைச்சல், அந்த வெட்டி வாயன் விவேக்'க போட்டுப்புட்டாரே... ஹ்ம்ம்.. சொல்லக் கூடாதுன்னுதான் நினைச்சேன் ஆனா சொல்லாம இருக்க முடியல.. பய நல்லாவே பண்ணி இருக்கான்!!

இதுக்கு மேல சொல்ல என்னால ஆகாதப்பா.. இப்பவே கண்ணக் கட்டுது... போய் ஒழுக்கமா தியேட்டர்'ல விசில் பறக்க சிவாஜியா பாத்து மிரண்டுட்டு வாங்க...

முடியே இல்லாம மொட்டையா வந்தாலும் அழகா இருக்காரே!!

"ஸ்டாப்பிட்"

எவ அவ?

நான் யாருன்னு தெரியல??

ஆஆஆஆ... பார்த்தீ... (இவனா!!!)

நீ சொல்லைன்னா நம்ம மக்கள் தியேட்டர் போய் பாக்க மாட்டாங்களா?

இல்லப்பா... திருட்டு வீசீடி அப்படி இப்படின்னு ... எல்லாம் ஒரு பார்மாலிட்டிக்குத்தான்

ஹா? திருட்டூ... வீசீடியா... யோவ் மக்களே அதை மறந்து இருந்தாலும் நீங்களே நியாபகப் படுத்தி விடுங்க!! எங்கப்பன் குதறுக்குல்ல இல்லைன்னு!!

ரைட் விடு..

என்னத்த ரைட் விடு?

நீ சொன்னதுதாம்பா

என்ன நீ சொன்னதுதாம்பா?

ஆஹா... ஆரம்பிச்சுட்டான்யா... அம்மா கன்னியா இதோட முடிச்சுக்குவோம்.. இல்லைன்ன இவன்... இல்ல இல்ல இவர் என்னை பிச்சு பிக்காரனாக்கி விடுவாரு... யப்பா ராசா.. மன்னிச்சுக்கோ... கெளம்பலாம்மா...

சொல்லிகிட்டே இருக்க.. கிளம்பு...

நீ... சாரி.. நீங்க..

நான் எப்பவோ கிளம்பிட்டேனே...

ஆஹா.. என்னை கெளப்பத்தான் நீ கெளம்புனியா?? வாஜி வாஜி சிவாஜி, நீ வாஜி வாஜி என் பாஜி!!!

*********************************************************************************

ஹிஹி.. சரி மக்களே சிவாஜி போய் பாருங்க... என்சாஆஆஆஆய்!!!

கன்யா