Sunday, February 25, 2007

சின்னஞ் சிறு வயதில்!!!

கடந்த சில மாதங்களாக நான் கண்ட, கேட்ட செய்திகளில் சில:

(1) 5 வயது சிறுமி திருக்குறளின் எல்லா குறள்களையும் மன ஏட்டில் பதிவு செய்துள்ளார்
(2) 7 வயது சிறுவன் திரைப்படம் இயக்குகிறான்
(3) 15க்கும் குறைந்த வயது உள்ள சிறுவர் சிறுமியர் நடிக்கும் காதல் திரைப்படம்!!!
(4) டெல்லியின் ஒதுக்குப் புரத்தில் சிறுவர் சிறுமியரின் பிணங்கள் கண்டு பிடிப்பு. குற்றவாளி விசாரிக்கப் படுகிறார்!!!??….
(5) 40 வயதை எட்டாத 3 பேருந்து ஓட்டுனர்கள் பேருந்து ஓட்டும் போதே மாரடைப்பால் மரணம்!!!

கொஞ்சித் தவழும் மழலைக் காலங்கள் இன்று இல்லாமல் போய்விட்டதோ என்ற கேள்விக்குறியே இந்த கவிதை… மழலைப் பருவமே உருவாய் வந்து தன் உணர்வுகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறது:

*********************************************************************************
துள்ளித் திறிந்த காலங்கள்
என் நினைவில் இல்லை தோழி
மழைத் துளிகளை ரசித்த நொடிகள்
மனதில் நிலைக்கவில்லை தோழி

புல்வெளியில் புதைந்து
என் பாதங்கள் நனைந்ததில்லை தோழி
ஓடும் மேகங்களை பிடிக்க
ஓடிய கால்கள் இவையில்லை தோழி

சேறும் சகதியும் ஆடையில் பற்ற
ஆடிய பருவம் எனக் கில்லாது போக
மழலையும் மறந்து அன்னை மடியையும் துறந்து
காகிதக் குப்பையில் முகம் தொலைந்த பாவமடி

போதாது போதாது என்றார் போல
இன்னும் புகழோடு நான் தவழ - முன்னோர்
எழுதிய ஏட்டுப் பாடங்கள் அனைத்தும்
என் மனக் கூட்டில் விதைத்தனரே

புகழை அடைந்தேன் - பிறர் பார்வைக்கு
வேடிக்கைப் பொருளாய் திரிந்தேன்
வேதமும் குறளும் என் நாவில் ததும்ப
குளரும் மழலையைத் தொலைத்து மயங்கினேன்

பிழை கண்டே பொருள் அரியும்
அர்ப்ப சுகம் அரியாது
பிஞ்சில் முதிரும்
சோகம் எங்கும் காணீரோ

சிறு குயிலின் தோள் மீது
சுமை பல ஏற்றும் மேதைகாள்
என் தோள்கள் தாங்கும் சுமைதனை
பூ இதயம் தாங்குமோ

சுமை பல தாங்கியே
பாழும் இதயம் இது
காலம் மிஞ்சி இருந்தும்
உயிரைக் கசிகிறதே தோழி

இட்ட வேலை செப்பென முடிந்தது
இனி தாமதம் வேண்டாம்
இறையடி சேர் என்கிறது
எனக்குள் ஒரு நிசப்தம்

இந்த மரணம் வேதனையா
இதை இன்றே காண்பதில் வலிக்கிறதா
என் பாதைகளை மெதுவாய் கடந்திருந்தால்
இனியும் துடித்திருக்குமோ என் இதயம்
என்ற எண்ணம் வலிக்கிறதா?

எதை வலியென்பேன்
எதை வலியென்பேன்

மானுடமே கேள்

இன்று செல்கிறேன்
இனியும் வருவேன் வேறு வடிவில்
அன்றாவது எனக்கு
முழுமையாய் வளர இடம் கொடு

*********************************************************************************

என்ன கொடுமை தெரியுமா? 5 வயது குழந்தை காமத்துப் பாலில் இருந்து கூட குறள் ஒன்றை ஒப்பிக்கிறது.. இதைத் தெரிந்து கொள்ளும் வயதா இல்லை புரிந்து கொள்ளும் நேரமா?

என்ன உலகமடா இறைவா.. இதைப் பார்த்துக்கவும் கேட்கவுமா இந்த நூற்றாண்டை கடக்கச் செய்தாய்… இதற்கெல்லாம் அவதரிக்காத கல்கி வேறு எதற்கு!!!

என் அம்மாவிற்கு நினைவில் இருக்கும் மழலைப் பருவம் கூட எனக்கில்லை.. என் குழந்தைக்காவது அந்த நினைவுகளை நான் சேமிக்க விரும்புகிறேன்..

Tuesday, February 20, 2007

பச்சைக்கிளி முத்துச்சரம்!!!!

அருவைப் படம் பார்த்து இருக்கேன் .. உதாரணத்துக்கு "விண்ணுக்கும் மண்ணுக்கும்"

மொக்கைப் படம் பார்த்து இருக்கேன் ... உதாரணம் "தாஸ்"

புரியாமையே படம் பார்த்து இருக்கேன்... "பாபா"

எவன் அடிக்கிறான் எதுக்கு அடிக்கிறான்னு தெரியாத அளவுக்கும் அடிதடி உள்ள படமும் பார்த்து இருக்கேன் .. "சுள்ளான்"

புழிஞ்சு தள்ளின படம் பார்த்து இருக்கேன்.. "காதல்".. "வெயில்"

அட கொடுமையே கேப்டன் படம் கூட பார்த்து இருக்கேன்... ஆன இப்படி ஒரு படம் பார்த்தில்லைடா சாமி!!!!!!!!!!

இந்த படத்தைப் பார்த்துட்டு வந்ததே அதிகம்... இதுல இதுக்கு ஒரு விமர்சனம் எழுதனுமான்னு யோசிச்சேன்... இருந்தாலும் இந்த படத்தை ஏற்கனவே பார்த்த பாவப்பட்டவர்களுக்கும்.. இன்னும் பார்க்காம இருக்குற பாக்கியசாளிகளுக்கும் ஒரு பொதுச் சேவையா இந்த விமர்சனம்

***********************************************************************************

பார்த்தார்கள்.. சிரித்தார்கள்.. காபி குடிக்க போனார்கள்.. இதுக்கே என்னோட அக்கவுண்ட்'ல எட்டு லட்சம் இருக்குன்னு ஒரு வெண்ணை வெட்டி ஒப்பிக்கிறான்னா... ஆண்களை இவ்வளவு அசமந்துக்களாக நான் கூட நினைத்தது இல்லை!!!!

மனைவி தன்னைவிட உடல் நலம் சரி இல்லாத தன் மகனோடு அதிக நேரம் செலவு செய்கிறாள்... தன்னோட உடல் உறவு வைத்துக் கொள்ள அவளுக்கும் மனம் இல்லைன்னு நினைத்த நம்ம ஹீரோ.. (இப்படி ஒரு ஹீரோவைத்தான் தமிழ் திரையுலகம் தேடிகிட்டு இருந்துச்சு போல... நான் சித்தப்பாவை சொல்லலைங்க... இந்த கதாப் பாத்திரத்தை சொன்னேன்!!!)

எங்க விட்டேன்... ஹா.. நம்ம ஹீரோ சின்ன சந்து கிடைச்சதும் சங்கீதம் கத்துக்க முடிவு பண்றார்.... (சிந்து பாடத்தான்!!!) சந்துக்கு ரொம்ப அழக ரூட் மேப் போடுகிறார் நம்ம ஜோ.. (அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்... ஆனா மேக்கப்தான் சகிக்கலை!!!!)

பிடிச்சிருக்குன்னு சொன்னா, என் கூட இருக்கனும்ன்னு சொன்னா, யாரும் இல்லாத இடம் எங்காவது போகலாம்ன்னு சொன்னா.. அடங்க இன்னுமா தெரியல அவ உன்னை மொட்டை அடிச்சு ஆண்டி மடத்துக்கு அனுப்ப போறான்னு... அய்யா செய்தி எல்லாம் படிக்கிறது இல்ல போல...

ஒரு வழியா தனியா தள்ளிகிட்டு போய் பேச்சுக் கொடுக்க.. அதுக்குள்ள எங்கிருந்தோ வந்தான் ரேஞ்சுக்கு ஒரு ரிசார்ட் கெஸ்ட் ஹவுஸ்க்கு வில்லன் வருகிறான்.. ரெண்டு பேரோட பர்ஸ்'லயும் வேற குடும்ப போட்டோ இருக்க .. இதை வெச்சு நம்ம ஹீரோவை மிரட்டி, பையன் மருத்துவ செலவிக்கு வெச்சு இருந்த எட்டு லட்சமும் அம்பேல்!!!

ஜாயிண்ட் அக்கவுண்ட்ல இருந்து 8 லட்சம் காலி ஆகியும் இது தெரியாம இருக்குற ஹிரோயினி... (புருஷன் மேல அவ்வளவு நம்பிக்கை பாவம்!!!!) .. ஆண்டிரியா.. அழகுன்னு சொல்றதா.. இல்ல அசடுன்னு சொல்றதா???

எல்லா பணமும் அம்பேல் ஆனதும் வேற வழி இல்லாம மனைவி கிட்ட உண்மையை சொல்ற ஹீரோ... அதுவும் எப்படி...

"பார்த்தேன்.. பேசினேன்.. பழகினேன்... பீச் ரிசார்ட் ரூம் வரை போனேன் ஆனா நான் ஒன்னுமே பண்ணல கல்யாணி என்னை நம்பு!!!!!!!!" அடடா இதுதாண்டா டயலாக்!!!

அம்மணிக்கு கோவம்.. 600 ரூபாய் எடுத்துகிட்டு ஏதோ ஒரு பஸ் ஏறியாச்சு... எங்கயோ பொன அப்பறம் ஒரு போன்...

"நான் தான் கல்யாணத்துக்கு முன்னாடியே சொன்னேன் இல்ல... நீ எப்பவாவது வேற எந்த பொண்ணு கூடயாவது இருந்தன்னு தெரிஞ்சா நான் உன்னை விட்டுட்டு ஏதாவது பஸ் ஏறுவேன்னு... ஏறிட்டேன்... திரும்பி வருவேனான்னு தெரியாது.. என்னை தேடாதே!!!"

இதுக்கு நடுவில நம்ம ஹீரோவுக்கும் ஒரு பல்பு எரிய.. உண்மையை கண்டிகிறான்.. அதாகப்பட்டது.. ஜோவும் மிலினும் (நம்ம வில்லன்!!) ஒரு ஜோடி... இப்படிதான் எல்லாருக்கும் மொட்டை அடிக்கிறாங்க...

இது இல்ல கொடுமை... இதுக்கு மேல... 3 நாள் களிச்சு அம்மணி வீட்டுக்கு ரிடர்ன்.. ஏன் தெரியுமா.... 600 ரூபாயிம் காலி... கட்டு கட்டா புருஷனும் பொண்டாட்டியும் செலவு செய்றாங்கப்பா!!!

எல்லாம் பேசி.. ஒரு வழியா முடிச்சாங்கன்னு பாத்தா... அடிச்சு புடிச்சு என் பணத்தோட வரேன்னு சொல்லீட்டு ஒரு துப்பாக்கி ஒரு இஸ்கூல் பேக் இதை எடுத்துகிட்டு நம்ம ஹீரோ அதே பீச் ரிசார்ட் போகிறார்.. அங்க வேற ஒரு அசமந்து!!!

இவர்தான் போனாரே சுட்டோமா நம்ம பணத்தை எடுத்தோமான்னு வேண்டாம்.. ஒரு 15 நிமிஷம் அந்த அசமந்துகிட்ட இந்த அசமந்து பேசுது!! உன்னை நான் இன்னைக்கு காப்பாத்தி இருக்கேன்.. என் காலில் விழுந்து நன்றி சொல்லீட்டு தப்பிச்சுப் போன்னு சொல்லிட்டு.. அந்த லூசு வாசலுக்கு போகும் போது எவனோ போட்டுத் தள்ளிட்டான்.. இதுக்கு எதுக்கு 15 நிமிஷ டயலாக்'ன்னு கேக்காதீங்க!!

எல்லாரையும் ஒரு ரவுண்டு சுட்டுட்டு ஹீரோ பணத்தோட ஹைதிராபாத் எஸ்கேப்... அப்பா படம் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சா... மனைவி ஆண்டிரியா மிஸ்ஸிங்... கடத்தினது நம்ம ஜோ... ஆமாங்க அம்மணி சாகல!!!

மம்மி ரிடர்ஸ் ரேஞ்சுக்கும் வில்லியாமா!! சந்திரமுகி பாதிப்பே இன்னும் இறங்கலை போல ... அதுல லகலகலக... இதுல அட்றா அட்றா... இப்படி கத்தினதுக்கு மட்டுமே ஒரு படத்தோட சம்பலம் வாங்கி இருக்கனும்...

கடைசியா ரெண்டாவது முறையாக ஜோவை கொல்கிறார் நம்ம சித்தப்பா... அப்பறம் தனக்கு சேர வேண்டிய 8 லட்சத்தை வட்டியோட எடுத்துகிட்டு.. மிச்சத்தை ஜோவோட ஒன்னுக்கும் ஆகாத அப்பிரசெண்டுகளுக்கு தானம் செய்கிறார்.... ஹீரோவாமாப்ப!!!!

அப்பா முடிஞ்சிடுச்சு!!!!
**********************************************************************************

என்ன கொடுமை சரவணன் இது... எல்லாம் எங்க அம்மாவும் ஜோவும் பண்ணின வேலை.. கௌதம் கிட்ட அப்படி ஒன்னும் பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லைனாலும் இது கொஞ்சம் அதிகம் தான்...

எனக்கு என்ன புரியலைன்னா.. இப்படி சராமாரியா ஒரு மெடிகல் ரெப்பிரசெண்ட்டேடிவ் கொலை செய்தும் போலீஸ் கேஸ் இது எதுவுமே ஒரு வாசனைக்கு கூட படத்துல இல்லை...

அப்பறம்.. மெனக்கெட்டு ஆண்டிரியாவை கடத்திக் கிட்டு போன ஜோ... இப்படி கத்தி கத்தி உயிரை விட்டதுக்கு ... ஆண்டிரியா பொட்டுல துப்பாக்கிய வெச்சு இருந்தா எல்லாமே சத்தம் இல்லாம முடிஞ்சு இருக்குமே... அதை விட்டுட்டு... ஆண்டிரியாவையும் கவனிக்காம சித்தப்பாவையும் அடிக்காம... வெரும் அப்பிரசெண்டுகளை கத்தியே வேலை வாங்கினதை நினைச்சா பாவமா இருக்கு!!!

மொத்ததுல பச்சைக்கிளி பிச்சுப்பிடுங்கும்.. ஹீரோ பணத்தை மட்டும் இல்லை.. என்னோட 360 ரூபாயும் சேர்த்துதான்...

பி.கு: வெளிய வந்ததும் இதை பார்த்ததுக்கு "வீராச்சாமியே" பார்த்து இருக்கலாம்ன்னு நான் கிண்டல் அடிச்சேன்... அதைக் கேட்டு எனக்கு பின்னாடி இருந்த இரு இளைஞர்கள்.. ஆமாண்டா மச்சான்... இந்த படத்தை பார்த்த பாதிப்பு போகனும் நாமா இன்னைக்கு ராத்திரிக்கு தூங்கனும்ன்னா போய் வீராச்சாமி பார்க்கலாம் வா'ன்னு கிளம்பிட்டாங்க...!!!!!!!!!!

Friday, February 09, 2007

வந்தேன் வந்தேன்!!!

நண்பர்களே,

சில நாட்களாக வலைப் பக்கம் வர முடியல... இப்போ ஆஜர் ஆகிட்டேன்.. இனி என்ன எழுதி தள்ள வேண்டியதுதான்... பாவம் நீங்கதான்.. :P

***********************************************************************************

இதோ சில ஹைக்கூக்கள்...

காவேரி

கேட்டவர் எவரோ
இங்கு உதை
வாங்குபவர் எவரோ!!!

பந்த்

வேலை இல்லாதவர்
பிறர் வேலையைக் கெட்டுக்க
சிறந்த ஒரு நாள்

காதலர் தினம்

காவேரி பந்த்
எல்லாம் கடந்து
காதலர் குதூகலிக்கும்
நன்னாள்!!

ps: வாழ்க காதலர் தினம்
இந்நாளில்
தமிழரும் கன்னடரும் காதல் கொண்டால்
தீறுமோ காவேரி கலேபரம்!!!!


ஹிஹி... எங்க அம்மா கிட்ட இன்னைக்கு டீம் லஞ்ச் போனேன்னு சொன்னப்போ.. ஊரே கலவரமா இருக்கு... உங்களுக்கு ஒரு கிலுகிலுப்புத் தேவையான்னு கேட்டாங்க... இதுக்கே இப்படின்னா காதலர் தினத்துக்கு எங்க அம்மா என்ன சொல்லுவாங்க!!!!!!!!!!!