Wednesday, December 03, 2008

இருண்டு கொண்டிருக்கும் தமிழ் நாடு

ஓட்டு போடுறது நம்முடைய உறிமை.. சரிதான்.. ஆனா ஓட்டர் லிஸ்ட்'ல நம்ம பேரு பதிவு பண்ணுறதுக்குள்ள நாய் படாத பாடு பட்ட ஒரு குடிமகள் நான்..

வயித்தெரிசலா இருக்குங்க தமிழ் நாட்டோட நிலவரம் பாக்கும் போது.... அரசியல்'ல குடும்பம் மொத்தமும் கூடி உக்காந்து கும்மி அடிச்சாங்க.. அப்பறம் கேபிள் .. அப்பறம் தனியார் தொலைக்காட்சி .. அதுல படம் மட்டும் காட்ட ஒண்ணு.. பாட்டு மட்டும் காட்ட ஒண்ணு.. அவங்க வசதிக்கு செய்திகள் வசிக்க ஒண்ணு.. காமெடிக்கு ஒண்ணு.. குடும்பம் ரெண்டு பட்டதுனால தொலைக்காட்சி வரிசைகளும் ரெண்டு பட்டு இப்போ.. நாலுக்கு எட்டு சேனல்கள் ..

சரி அப்படித்தான் எட்டு சேனல் இருக்கே எதுலையாவது நல்லதா நாலு வார்த்தை கேக்க முடியுதா... எல்லாத்துலயும் இழவெடுத்த காதல் படம்.. காதல் பாட்டு.. கேவளமான நகைச்சுவை .. தேவை இல்லாத ரியாலிட்டி ஷோ.. இன்னும் என்ன எல்லாம் பாக்க வேண்டியது இருக்கோ??

சரி விட்டு தொலைக்கலாம்'னு நினைச்சா.. அடுத்து சினிமாத் துறை.. அதுல தான் என்ன புதுசா காட்டுறாங்கன்னு பாத்தா ... செத்து போன காதலியோட பிணத்தை தூக்கி கிட்டு திரியறதுதான் காதலாம்!! என்ன கொடுமை சார் இது!!

இவங்க திட்டம் தான் என்ன??

குடும்பம் மொத்தமும் எல்லா துறைகளிலும் அசைக்க முடியாத அளவு ஊடுருவிட்ட அப்பறம் நாடென்ன நட்டு மக்கள் என்ன ?? எல்லாத்தையும் அடிமைகள் ஆகிடலாம் இல்லையா?

எதோ இப்போதான் இளைஞர்கள் எல்லாம் படிப்பு, தொழில், சாதனைகள்'னு உழைப்பை மதிக்க ஆரம்பிச்சு இருகாங்க.. இப்போ அவங்களை மறுபடியும் காதல்.. கத்திரிக்காய்'னு பித்து பிடிக்க வெச்சுட்ட .. கூலி இல்லாத அடிமைகள .. சுய புத்தி இல்லாத மூடர்கள என்னைக்கும் நம்மை ஆட்டி வைக்கலாம் இல்லையா?

சரி இதை எல்லாம் விடுங்க.. ஓடி ஓடி உழைச்சு 30% வரி கட்டுரோமே.. அந்த பணம் எங்கே போகுது தெரியுமா?.. மறைந்த தலைவர்களோட பழைய வீடு, சமாதி இதை எல்லாம் பராமறிக்க மட்டுமே ஒரு வருசத்துக்கு எவ்ளோ செலவு ஆகுது தெரியுமா??

அது மட்டுமா?? வயது வரைமுறை இல்லாம.. இந்த அளவுகாவது ஆரோக்கியமா இருக்கணும்'னு எந்த சட்டமும் இல்லாம .. இன்னும் தலைவர்கள இருக்குற சிலரோட மருத்துவச் செலவுக்கு.. தன்னை தானே காப்பாதிக்க முடியாத தலைவர்களுடைய அளவுக்கு அதிகமான பாதுகாப்புக்கு.. உக்காந்தா எழுந்துக்க முடியாத தலைவரோட தனிப்பட்ட நர்சு செலவுக்கு.. இன்னும் சொல்லனுமா என்ன??


தெரியாமத்தான் கேக்குறேன்.. நமக்கு தெரிஞ்சு அறுவது எழுவது வயசு ஆனா நம்ம தாத்த பாட்டி எல்லாம் போகும் போது யாருக்கும் தொல்லை இல்லாம .. வலி இல்லாம போகணும்'னு தானே கடவுளை வேண்டி இருகாங்க.. அது ஏன் சிலருக்கு இருக்க மாட்டேங்குது.. ஒரு உடல் இவ்ளோ நாள் தான் இருக்கும்'னு ஒரு அளவு இருக்கு இல்லையா? அதுக்கு மேல அதை வாட்டினா என்ன ஆகும்!!

காது கேக்குறது இல்ல.. பிரஸ் மீட்'ல பத்திரிக்கை ஆளுங்க என்ன கேக்குறாங்கன்னு காதுல விழுந்து அது மண்டைக்கு போறதுகுள்ள வாய் எதையோ சொல்லி தொலைக்குது.. அதுவும் அறிவோட அனுமதி இல்லாம .. இதை ஒண்ணு பத்திரிக்கை உலகம் புரிஞ்சுக்கனும்.. இல்ல பிற தனியார் தொலைக்காட்சிகளாவது புரிஞ்சுக்கனும்.. ரெண்டுமே இல்லாம அதையும் ஒரு சுட சுட செய்தி ஆக்கி நம்ம காதுல ரத்தம் வர வைக்கிறாங்க..

கண்ணு தெரியறது இல்ல ஆனா திரை உலகம் மொத்தமும் கூடி மேடை'ல நடிகைகளை ஆட விடும் போது மட்டும் முதல் வரிசைல உகந்து என்ன பாக்குறாங்க??

குடும்பத்துக்குள்ள அடிசுகுறாங்க.. நான் அப்படி என்ன தப்பு செய்துட்டேன்னு சீன் போடுறாங்க.. அவங்க பண்றது மட்டும் சரியான்னு சகதிய மாதி மாதி விசிகிறாங்க.. அப்பறம் ஒன்னு கூடி ஈ'னு இழுசுகிட்டு பத்திரிகைக்கு போஸ் கொடுக்குறாங்க..

தேர்தல்ன்னு வந்தா.. கலர் டி வீ கொடுக்குறாங்க.. ரூபாய்க்கு கிலோ அரிசி கொடுக்குறாங்க.. என்ன கணக்கு இது எல்லாம்?? இதுக்கு எல்லாம் யாரோட பணம் போகுது.. என்ன யோசனை எல்லாம் நம்ப கொடுக்குற வரிதான்

அண்ணாத்துரை காலத்துல ஒரு ரூபாய் ஒண்ணும் இன்னைக்கு இருக்குற ஒரு ரூபாய் கணக்கு இல்ல.. அப்போ ஒரு கிலோ அரிசி மூணு ரூபாய்'னு சராசரி மனிதன் வாங்கினா.. ஏழைகளுக்கு அண்ணாத்துரை ஒரு ரூபாய்க்கு கொடுக்கணும்'னு நினைச்சார்.. அது நியாயம் .. இன்னைக்கு வரி கட்டுரை நாம எல்லாம் ஒரு கிலோ அரிசிய முப்பது ரூபாய்க்கு வாங்கின, நியாய விலை பத்து ரூபையாவது இருக்க வேண்டாமா??

இது மூலமா என்ன சாதிச்சீங்க.. ஆட்டோ ஓட்டுறவன்.. கூலி வேலை செய்றவன் எல்லாம் ஒரு நாளைக்கு நூறு ரூபாய் சம்பாரிச்சா, அறுவது எழுவது ரூபாய் வீட்டுக்கு கொடுத்துட்டு நாப்பது இல்ல முப்பது ரூபாய்க்கு குடிகிறான்னு வெச்சுக்குவோம்... அவனே இன்னைக்கு நாப்பது இல்ல முப்பது ரூபாய் வீட்டுக்கு கொடுத்துட்டு அறுவது எழுவது ரூபாய்க்கு குடிகிறான்.. அதான் ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைக்குதே!!

சரி.. இது மட்டும் தான.. இன்னும் எத்தனை பிரச்சனை இருக்கு தெரியுமா?? இலங்கை தமிழர் பிரச்னைக்கு வருவோம்.. இன்னொரு தனியார் தொலைக்காட்சி'ல ஒரு இலங்கை தமிழர் பேசியது!! அவங்க நாட்டுல ஆடம்பரமா வாழ்தவங்க இங்கே வந்து கஞ்சிக்கு கூட கஷ்டப் படுறாங்கன்னு.. அகதிகள்'னு கணக்கு கட்ட மட்டும் அவங்களை பயன் படுத்துற அரசாங்கம் அவங்களுக்கு உழைக்க ஒரு வழி காட்டுறது இல்ல.. தீவிரவாதிகள்'னு பீதில இருக்குற போது ஜனங்களும் அவங்கள நம்பி வேலை கொடுக்குறது இல்ல.. அப்பறம் எப்படி அவங்க வாழுவாங்க?

பாஸ்போர்ட் கொடுக்க பண்ற பேக் ரௌண்ட் செக் மாதிரி இவங்களுக்கும் செய்து ஒரு அரசாங்க அட்டை கொடுத்தா அவங்க வேலை தேடிக்க வசதியா இருக்கும் இல்லையா? அதை ஏன் செய்றது இல்ல.. இப்படி எல்லாம் அவமாணப் படனுமேன்னு தான்.. அவங்க யாரும் இங்கே வந்து அசிங்கப் பட்டு போறதுக்கு சொந்த நாட்டுளையே அடி பட்டு சாகலாம்'னு நினைகிறாங்க.. தீவிரவாதம் ஏன் வளராது?

இப்போ மும்பை'ல நடந்த குண்டு வெடிப்பே இருக்கட்டும், ஏழைகள் கூட்டம் கூடமா வாழுற எத்தனையோ இடங்கள் இருக்கு மும்பை'ல அங்கே எல்லாம் குண்டு போட்டு இருந்தா எத்தனை பேர் செத்து இருப்பாங்க.. தீவிரவாதிகளுக்கும் அது தானே வேணும்.. நிறைய மரணம்.. ஆனா ஏன் அவங்க வெறும் பணம் படைத்த சமுதாயத்தில் குண்டு போட்டாங்க??

மஞ்ச பத்திரிகை கொடுத்த பச்சன், ஆனா அவரோட குடும்பம் இன்னைக்கு உலகம் முழுக்க ஒளிபரப்பாகுற தொலைக்காட்சி கணகேடுப்புப் படி இரண்டாயிரம் கோடி மதிப்புள்ள சொத்து உள்ளவர்களாம்!! வெறும் ஆயிரக் கணக்குல கடன் வாங்கிட்டு வங்கிகளோட தொல்லை தாங்காம தற்கொலை செய்துக்குற அவலமும் இங்கே தான் .. 2000 கோடி சொத்து உள்ள பிச்சைக்காரணும் இங்கதான் .. அப்பறம் ஏன் சார் தீவிரவாதம் வளராது!!

தனியார் தொலைக்காட்சி'ல ஒரு நிகழ்ச்சி'ல சொல்றாங்க.. தமிழ் நாட்டுல ஒரு கிராமத்துல பிறந்த குழந்தைக்கு சூடு போடுறாங்களாம்.. அப்படி சூடு போட்ட நோய் வராதாம் .. காத்து கருப்பு அண்டாதம்!! இது அவங்களோட நம்பிக்கையாம்.. அதுக்கு அந்த ஊரை சேர்ந்த கலெக்டர் மருத்துவர்கள் போலீஸ் எல்லாரும் பொய் அப்படி செய்யாதீங்க அது தப்பு.. இது தொடர்ந்து நடந்த உங்க மேல சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும்'னு கேஞ்சினாங்களாம்.. அப்படியும் அது தொடர்ந்து நடக்குதாம்.. பெத்தவங்களே அதை செய்யும் போது யார் மேல எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்'னு வருத்தப் படுறாங்களாம்!!

ஏன்? அந்த ஊருல இருக்குற குழந்தை பெத்துகுற வயசுல இருக்குற எல்லாருக்கும் பேசாம குடும்பக் கட்டுப்பாடு செய்து விட வேண்டியதுதானே? இது கொலையும் இல்ல .. இனி அவங்களால கொலை செய்யவும் முடியாது இல்லையா? இருக்குற சின்ன குழந்தைகள் எல்லாம் வளைந்து வந்து கல்யாணம் குடும்பம்'னு ஆகா எப்படி 15 - 20 வருஷம் இருக்கும் .. அவங்களுக்கு எல்லாம் சொல்லி கொடுத்து வழக்களாமே!!

ஒரு உயிரை காப்பாத்த கூட கேஞ்சனுமா என்ன? இந்த மாதிரி முடிவு எடுக்க அரசாங்க மருத்துவர்களுக்கு உறிமை இருந்தா அவங்கங்க கண்டிப்பா இப்படி ஒரு முடிவை எடுபாங்க..

என்னடா இவ்ளோ கொடூரமா சொல்லுறாளேன்னு நினைகுறீங்களா?? நடகுறதும் கொடுமை தாங்க .. இதை எல்லாம் விட நம் மக்களுக்கு சினிமா.. நடிகர்கள் .. அரசியல் தலைவர்கள் .. இது எல்லாம் தான் பெரிசா தெரியுது!!

சொல்லி முடியாத அவலம்!!