Friday, December 24, 2010

என்ன செய்வேன் ?????

உயிரினும் மேலாய்
உனையே சுவாசித்தேன்
இதயம் முழுதும்
உன்னக்கே கொடுத்தேன்

இமைகள் துடிக்கும்
நொடிப் பொழுதில்
உன்னை சுமந்த இதயத்தை
துகள்களாய் துண்டித்தாய்

பத்து வருடங்களாய்
சிதறிய துகளில் எல்லாம்
அந்தக் காதலை கருவாக்கி
நினைவுகளால் ஒத்தடம் கொடுத்தேன்

என் கருவை
இனி சுமக்கவும் தெம்பில்லை
கலைக்கவும் மனதில்லை

Tuesday, August 17, 2010

ஒரு பாடல் தந்த ஊக்கம்

வணக்கம் நண்பர்களே

ரொம்ப நாள் ஆச்சு .. இந்த பட்டை எழுத ஆரம்பிச்சு .. இந்த பக்கம் வந்தும் தான்.. :)

பௌர்ணமி'னு ஒரு தெலுங்கு படம் .. அதுல இந்த பாட்டு என்னக்கும் ரொம்ப பிடிக்கும்.. இந்த பாட்டு தமிழ்'ல கூட வந்திருச்சு இருந்தாலும் என்னோட சந்தோஷத்துக்காக நான் எழுதினேன் .. இசை'ல ஆர்வம் இருக்குற அளவுக்கு என்னக்கு அறிவு இல்ல .. ஸ்வரங்களுக்கு தோதா சில வார்த்தைகள் இல்லேன்னா மன்னிச்சுடுங்க... உங்க கருத்துக்களை சொல்லுங்க...
*******************************************************************************************
சம்போ சங்கரா ....

தத் தித் தா தக தீம் த தீம்
என நித்தம் ஆடிடும் ஈஸ்வரா
ஊதும் சங்கின் நாதமாய்
ஓம்காரம் சொல்லும் நாயகா

பரத வேதம் கொண்டு
நடன யாகம் செய்ய
பழகிய பதம் இது ஈசா

சிவனின் நாமம் சொல்ல
புவனம் யாவும் உள்ள
வினை களைந்திடும்பர மேசா

நீலகண்டனே நித்ய சுந்தரா
கருணையில் கண் மலராய்

வேத நாயகா ருத்ர காந்தார
எந்தவம் தனைப் பாராய்

வருவாய் மனோஜ ஜகதீஷ்வரா
சு காந்த சாம்பாவ சங்கரா

பரத வேதம் கொண்டு
நடன யாகம் செய்ய
பழகிய பதம் இது ஈசா

சிவனின் நாமம் சொல்ல
புவனம் யாவும் உள்ள
வினை களைந்திடும்பர மேசா

ஹர ஹர மகாதேவா........... (5)

ஆ …………..

ஹா ….


ஆத்ம பந்தம்நீ அல்லவா
நாடும் பிள்ளைநான் அல்லவா
வனமாகி மேகமாகி என்னை அட்கொள்ளு மன்னவா

ஆதி சக்தி அம்சம் நீ
அண்டம் காக்கும் சிற்ஷ்டி நீ
தேகம்பாதி தேவியாகி நின்ற ஈசனே உமாபதி

ஹா ……

உடலை உனக்கு சிறு திரியாக்கி
உயிரை உருக்கி அதில் விளக்கேற்றி
வளர்த்த யாகம் இது பாராய்
மாயனே மனோகரா நின் மனம் இறங்கதா.. தேவா

பரத வேதம் கொண்டு
நடன யாகம் செய்ய
பழகிய பதம் இது ஈசா

மடியில் உமையவள் தலையில் மலையவள் இருவரின் துணைகொண்ட கைலேஸ்வரா
பக்தனின் பக்தியில் நாத்திகன் அன்பினில் நித்தம் வாழ்த்திடும் பிரியபுஷ்கரா
பாவ விமோசன பைரவ துர்ஜெய மஹா கால விஷ்வேஸ்வரா
ஆஷுதோஷ தய சாம்பா சதாசிவா ஜெய கிரீஷ பிரிஹ லிங்கேஸ்வரா

ஹர ஹர மகாதேவா...... (2)

ஓம் நமசிவய ….(8)

ஓ மகேஷன் உன்னை இதயத்தில் விதைத்த என் நேசக் குரலை நீ கேட்பாயோ
யோகா நாதன் என் உயிரினில் கரைந்திட்ட ஆத்மா ராகம் உனதே

ஜோதி ஈசனென் அருகினில் இருக்கையில் சூழும் இருளும் இனி வதைதிடுமோ
பூமி யாவும் உள்ள உயிர்களை காத்திடும் அபாய கரங்கள் உனதே

ஜதியும் ஸ்வரமும் உன் நாமங்கள் உடுக்கை ஒலியும் உன் ரூபங்கள்

பார்க்கும் திசைகள் எல்லாமும்.. முதலுமாகி முடிவுமாகி நின்றாய் நீ

ஹர ஹர மகாதேவா .... (12)

*******************************************************************************************

அன்புடன்
கன்யா

Sunday, June 20, 2010

சுமை

பூமி தொட்ட
முதல் மழையை
மண் மறந்தது

கொடியில் பூத்த
முதல் மலரை
கிளைகள் உதிர்த்தது

முத்தம் இட்ட
முதல் வண்டை
மலர்கூட பிரிந்தது

பாழும் இதயம் தொட்ட
முதல் காதலை
ஏன் உயிர் இன்னும் சுமக்குது

Friday, March 05, 2010

உன்னகாக.........

உன் கண்களில்
என்னை மறந்தேன்
உன் மொழிகளில்
நான் சிவந்தேன்

உன் மௌனங்களில்
உயிர் கரைந்தேன்
உன் பிரிவில்
முழுதாய் மடிந்தேன்

உன்னை தெரியுமென
கர்வம் என்னக்கு
இன்று உன்னை தெரியாமல்
தொலைத்த தவிப்பு எனக்கு

உன் நினைவுகளை
நான் தேடும் நொடிகள் அனைத்தும்
உன் வாழ்வில்
சுகம் பல சேர்க்க வரம் வேண்டி
என் பிரார்த்தனைகள்!!