Thursday, August 02, 2007

வரம் தா!!

விடியலைத் தேடி
என் இரவுகள்
ஒளியினைத் தேடி
ஓடும் பாதைகள்

அமைதியைத் தேடி
அலரும் இதயம்
ஏன் தந்தாய் இறையா
இப்படி ஒரு சாபம்!!

மனதைப் படைத்தாய்
அதில் வலிகளை விதைத்தாய்
விழிகள் கொடுத்தாய்
பல கனவுகள் உலவவிட்டாய்
அறிவொன்று தந்தாய் - அதன்
அழிவையும் உணரச்செய்தாய்

உணர்வுகள் தந்தாய்
உணர்ச்சிகள் உறையக் கண்டாய்
ஊன் ஒன்று தந்தாய்
உயிர் கசிய பார்த்து நின்றாய்
பாதைகளை வகுத்துவிட்டு
இலக்கினை மறைத்து வைத்தாய்

எதைத் தேடுகிறோம் அதை
எதற்காகத் தேடுகிறோம் என்ற
பொருளில்லா தேடல்
இந்த வாழ்க்கை

இன்று வருமோ இல்லை
என்று வருமோ என்று
ஓயாமல் ஓடும்
பல காலம்

இனியும் தேட சக்தி கொடு
இல்லையேல்
இனியாவது ஓய்வு கொடு!!!

11 comments:

G3 said...

Kavidhai super kanya :) Eppavum pola asathiteenga :)

//பாதைகளை வகுத்துவிட்டு
இலக்கினை மறைத்து வைத்தாய்

எதைத் தேடுகிறோம் அதை
எதற்காகத் தேடுகிறோம் என்ற
பொருளில்லா தேடல்
இந்த வாழ்க்கை
//

100% Nijam :)

Anonymous said...

me d first..ennaga solla vareenga...bk to soga kavidhais?

~gils

gils said...

ithu cheating..cycle gapla g3 poontanga

Anonymous said...

kanya,

i think time has to take rest for u:) get lost..atleast we will spared from ur writings

Ram said...

//இனியும் தேட சக்தி கொடு
இல்லையேல்
இனியாவது ஓய்வு கொடு!!!//

ha...super...

Anonymous said...

Worst poem ever....pls stop writing...

Kanya said...

Thanks g3.. gils and ram

Gils sogam'nu ellam ezhuthala.. i write what i feel... avlothaan

@Mr. Anonymous...

who r u? this is a private space and i have all the right to write anything i want.. u r not invited here.. u r someone who are coward enough not to identify urself... stay away from ppl's blogs if ur sense of appreciation has gone to the dogs!!

@visitors and friends,

Sorry abt my reply above... this guy has been posting crap on my blog for quite sometime now!!

Murali Venkatraman said...

இனியும் தேட சக்தி கொடு
இல்லையேல்
இனியாவது ஓய்வு கொடு!!!

I remember writing about the plight of workers in aPoetry competition:

விடியும் விடியும் எனக் காத்திருந்தோம்
விடியும் முன்
கண்கள் சிவந்து சீரழிந்தோம்

I do not remember any of the other words. உங்கள் வரிகளைப் பார்த்தவுடன் எனக்கு அவை ஞாபகம் வந்தன. Keep it up !

மங்களூர் சிவா said...

//
இல்லையேல்
இனியாவது ஓய்வு கொடு!!!
//
You mean VRS??
:-)))))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

// இனியும் தேட சக்தி கொடு
இல்லையேல்
இனியாவது ஓய்வு கொடு!!!
//

'இனியும் இயங்க வலுவின்றி
இயற்கை எய்துகின்றேன் இன்று நான்'

என்று நான் ஒறுமுறை எழுதியதை ஞாபகப்படுத்தியது. வாழ்த்தும் தகுதி எனக்கில்லை. தங்களின் கவிதைகளை இரசிக்கிறேன்

இராவணன் said...

//இனியும் தேட சக்தி கொடு
இல்லையேல்
இனியாவது ஓய்வு கொடு//

எதார்த்தமான வரிகள். அழகு.