Sunday, July 30, 2006

காலன் அழைக்காத ஒரு மரணம்!!

சில காலமாய்
மார்பின் நடுவில்
மார்கழியாய் பனி வீசினாய்

இன்றோ
உயிருக்குள் தீப்பொறி ஒன்றை
விதைத்துச் சென்றாய்

திறக்காத புத்தகமாய்
நான் இருந்தேன்
பக்கங்களில் எல்லாம்
உன் ரேகை பதித்தாய்

பாதியில் முடிவுரை
எழுதிவிட்டு
என் உணர்வுகளை
சபித்துச் சென்றுவிட்டாய்

காதலைச் சுமக்க
நான் முயன்றபோதெல்லாம்
உடைந்து கொண்டிருந்தது
என் இதயம்

இனி சிதைவதற்கு மீதம் இல்லை
உரைந்த குறுதியில் சிதறிய துகள்களில்
மிஞ்சியது ஏனோ வெரும் காயம்

மரித்த இதயமும்
உணர்வுக்ளை மறத்த காயமும்
உன்னோடு மட்டும் அல்ல
எவரோடும் உறவாடக்
கொண்டதல்ல

இனி காலனின் அழைப்பு வரும் வரை
காயமே நீ வலித்திரு
இந்த வலி மட்டுமே
நீ வெரும் காகித கப்பல் என்பதை
உனக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும்

சொந்தங்களே
என் கல்லறையின் கல்வெட்டுகளில்
பதியுங்கள்
இங்கு சடலத்தைப் புதைத்தோம்
என்று!!!

4 comments:

Anonymous said...

ninaivu ennum punnil nigazhichi enra kal pattu vittal pazhaya ennam enra ratham vadindhu konde irukkumi...irukka....irukku naan ammada kanya

Ram said...

//இனி சிதைவதற்கு மீதம் இல்லை
உரைந்த குறுதியில் சிதறிய துகள்களில்
மிஞ்சியது ஏனோ வெரும் காயம்

மரித்த இதயமும்
உணர்வுக்ளை மறத்த காயமும்
உன்னோடு மட்டும் அல்ல
எவரோடும் உறவாடக்
கொண்டதல்ல
//

yenna oru strong aana wordings????appa...seriyana message convey pannerukkenga...

Deekshanya said...

excellent! liked this very much.. unarnthu vasithain ungal kavithaiyai. write more...
good luck
-deeksh

Bee'morgan said...

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க.. இழப்பின் ஆழத்தை அதற்கே உரிய பரிமாணங்களில் பதிந்து செல்கிறது இக்கவிதை..
//
இனி காலனின் அழைப்பு வரும் வரை
காயமே நீ வலித்திரு
//
அருமை..!
..
ஒரு சில எழுத்துப்பிழைகளைத் தவிர்த்தால் இன்னும் சிறப்பாக அமையும்.