Sunday, November 19, 2006

ஹைக்கூ - 2


விதவை

கனவுகளுக்கு வாசல் திறந்து
வண்ணங்களை உதிர்த்த
வெள்ளைப் புறா

பனித்துளி

இயற்கையவளின்
தேகம் உரசிப் போனதில்
தென்றலுக்கு வேர்த்தது

நட்பு

ஊரார் சொல்லும் காதலை
ஒதுக்கி வைத்திவிட்டு
என் கண்களை மட்டுமே
பார்த்துப் பேசும் உன் உறவு...

பக்தி

இறை நாடும் ஆத்திகரும்
தனைச்சாடும் நாத்திகரும்
உண்டென்றும் அல்லவென்றும்
அரனோடுகொள்ளும் உரிமைப் போராட்டம்

சுமை

என்னை மறந்த நீ
உன் நினைவுகளை மறக்கும் பயத்தில்
என் சட்டைப் பையில் உன் நிழற்படம்

14 comments:

Unknown said...

sumai is nice :)

KK said...

Vithavai, Natpu and Bakthi ultimate...nachunu irukku... solli kodutha maathiriye yezhuthi irukeenga :)

Anonymous said...

scene a ezhutheerukkeka.... ippadiye pone... appuram unnoda influencela naanum intha maathiri ethavathu ezthutheeduven!!! jaakirathai!!!

gils said...

panithuli poem..awesome...nachu..natpum super...kalakareenga Kanya

G3 said...

1st 3 nijamaavae topu :) Kalakittenga..

Ram said...

Good one.!!

"அரனோடுகொள்ளும் உரிமைப் போராட்டம்" - Konjam explain pannunga , yenakku puriyalai.

Siva said...

very nicely written. accidentally stumbled upon this blog but liked your style

பிரியமுடன்... said...

இனிய தமிழுக்குள்
இப்படியெல்லாம்
இனிமை சேர்க்கலாம் என்பதை
இங்கே காண்கிறேன்!
அரிய வரிகள்
அழகான பொருள்!
புரியும்போது
தமிழ்
இனிப்பாய் இருக்கிறது!
இலவசமாக
இனிப்பு வழங்கிய
இந்த வரிகளின்
சொந்தக்காரரை
சொக்கதங்கமென
சொல்லி பாராட்டுகிறேன்.

Marutham said...

VIdhavai, natpu , sumai moonumey sooper :D

Neeng aengey poiteenga..:)
we all miss u..
come back

Swamy Srinivasan aka Kittu Mama said...

kalakkals

natpu romba super.

Harish said...

Nachchu....

G3 said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)

KK said...

Wishing you a very Happy and Prosperous New Year!!! :D

Unknown said...

vaipey illa. chancey illa.. sooperu kavidhais! :)