Monday, May 05, 2008

என்று தனியும் இவள் தாகம்?

உறவுகள் கோடி கூடி இருந்தும்
ஊமையாய் ஒரு இதயம்
உதிர்ந்து போன நிஜங்களை
ஓயாமல் அசைபோடுகிறதே

நினைவுகளைச் சுமக்கும்
கூட்டின் வழிச்
சொல்லி முடியுமென்றால்
உதடுகள் காயச் சொல்லி இருப்பாள்

அவள் என்ன செய்குவாள்
பாவம் நாட்களை தொலைத்துவிட்டு
நினைவுகளில் மட்டுமே
சிறை பட்டு வாழுகிறாள்

ஏட்டுப் பாடம் பயிலும் வயதில்
வேறு எண்ணம் வாராது வளர்ந்தாள்
காதலை உணர்ந்த சாபம்
இவள் இன்று இந்தக் கோலம்

இவள் கோபம்
காதலின் மீது அல்ல
தொலைந்து போன
காதலன் மீதும் அல்ல

மனிதனின் மீது
அவனுள் உறைந்து போன உணர்வுகள்
அவன் மறந்து போன மானுடம்
அவசரமாய் அவன் தீர்த்துக் கொள்ளும் உணர்ச்சிகள்

என்ன அவலம்
எப்படி செய்வாள் காதல்
யாரிடம் தேடுவாள்
உறக்கப் பேசும் உணர்வுகளை

4 comments:

தமிழ் said...

/இவள் கோபம்
காதலின் மீது அல்ல
தொலைந்து போன
காதலன் மீதும் அல்ல

மனிதனின் மீது
அவனுள் உறைந்து போன உணர்வுகள்
அவன் மறந்து போன மானுடம்
அவசரமாய் அவன் தீர்த்துக் கொள்ளும் உணர்ச்சிகள்

என்ன அவலம்
எப்படி செய்வாள் காதல்
யாரிடம் தேடுவாள்
உறக்கப் பேசும் உணர்வுகளை/

அருமையான வரிகள்

Anonymous said...

Why don't she forget her ex-lover and marry VASU

செல்வேந்திரன் said...

உணர்வுகள் பேசுகின்றது கவிதையின் வழியாக

உறக்க அல்ல உரக்க...

A little extra time... said...

hoi... who is tat vasu?? huh???