Friday, September 05, 2008

தொடரும்!!

என் இதயச் சுவர்களில்
காலம் இட்ட சூடு
காய்ந்த பிறகும் பதிந்து போன
தழும்புகளின் சாயல் -
என் வார்த்தைகளில்
கசப்பாய் கசிகிறது என்றாய்


மறுத்துப் பேச மொழி அரியது
சிக்கனமாய் புன்னகைக்கிறேன்

உதடுகளில் தேன் வைத்து
உள்ளத்தில் தீ வைக்கும்
சில நிழல்களை
நிஜம் என்று நினைத்த
வெள்ளை மனதொன்றில்
இந்த மாற்றம்

இறுகிய என் உணர்வுகள்
உன்னகேனும் புரிகிறதா என்றேன்
மௌனமாய் ஆமோதிக்கிறாய்

சொல்லி என்ன... கேட்டென்ன
திசைக்கு ஒன்றை பாதைகள்
திக்குக்கொன்றை ஆசைகள்
சந்திப்போம் ஒரு நாள்
நம் பாதைகள் சேர நேர்ந்தால்

5 comments:

Iyappan Krishnan said...

சில எழுத்துப் பிழைகளைத் தவிர்த்து பார்த்தால், கவிதைச் சுடுகிறது

Iyappan Krishnan said...

//உதடுகளில் தேன் வைத்து
உள்ளத்தில் தீ வைக்கும்
சில நிழல்களை
நிஜம் என்று நினைத்த
வெள்ளை மனதொன்றில்
இந்த மாற்றம்//


பொதுவாக எல்லாருக்கும் இது நடக்கும் தான்.

when it happens first time, it is mistake. If it repeats, then it crime.
எனக்கு யாரோ சொன்னது :) இது மாதிரி நானும் ஒரு காலத்துல புலம்பினப்ப :))

gils said...

sudum kavithai
sudaatha vaarthaigal

podhum sogam
perugum bogam

ellam ellam..
elaam venduma..
sandhosha post onu podunga :))

தமிழ் said...

/உதடுகளில் தேன் வைத்து
உள்ளத்தில் தீ வைக்கும்
சில நிழல்களை
நிஜம் என்று நினைத்த
வெள்ளை மனதொன்றில்
இந்த மாற்றம்/


அருமையான வரிகள்

ஆயில்யன் said...

//சொல்லி என்ன... கேட்டென்ன
திசைக்கு ஒன்றை பாதைகள்
திக்குக்கொன்றை ஆசைகள்
சந்திப்போம் ஒரு நாள்
நம் பாதைகள் சேர நேர்ந்தால்//

நல்லா இருக்கு :)