Saturday, January 21, 2012

காதல்

காணும் இடமெல்லாம் அவனைக்
காணக் காத்திருக்கும் கண்களை
பேசும் மொழி எல்லாம் அவன்
இதல்வழிக் கேட்கக் கெஞ்சும் காதுகளை

துவர்க்கும் சுவை எல்லாம் அவனை
நினைத்தே இனிக்கும் உதடுகளை
நெருங்கும் நொடிகளில் அவன்
தோழ் சாயத் தள்ளும் கால்களை

மெதுவாய் சபித்துக் கொண்டிருகிறது
அவனுக்காக எனக்கே தெரியாமல் துடிக்கும்
என் இதயம்

- கன்யா

1 comment:

Anonymous said...

அம்மையீர்,

வெறும் கனவுகளும் வீண் கற்பனைகளும் விரக்தியின் விளிம்புகளாக இருக்கின்றன உமது எழுத்துக்களில்...

பிழையின்றி எழுத வேண்டும்; பிழையின்றியும் வாழ வேண்டும். அதுதான் தமிழின் ஓசையாக இருக்க முடியும்; தனிஒரு நபரின் ஆசை தமிழின் ஓசையாக இருக்க முடியாது.

தனி நபரின் உள் வேட்கைக் கருத்துக்களை எல்லாம் கவிதை என்பதாக எண்ணிக் கொண்டு அதை உலகிற்கு காட்டுவது அரைவேக்காட்டுத் தனம்.
தமிழைக் கேவலப்படுத்தும் குணம்.
தமிழுக்கென்று தனிப் பண்புகளும் உயர் ஒழுக்கச் சிந்தனைகளும் உண்டு. அதைப் பின் பற்றி எழுதாமல் புண்பட்ட எண்ணங்களையும் புரையோடிப் போனதன் பிண்ணனியில் எழும் சிந்தனைகளையும் எழுத்தாக்காதீர்கள்.

தமிழ் என்னும் புனித நதியில் சாக்கடைகள் கலக்காமல் இருப்பது கூட நீங்கள் தமிழுக்குச் செய்யும் அரிய தொண்டுதான்.

உங்களுடைய எழுத்தின் வேட்கை என்பது பிறப்பின் மூலம் தந்திருக்கிறது என்பது புரிகிறது.
அதை எட்டி உதைத்து விட்டு எழுதுகிறேன் என்பது அண்ணாந்து கொண்டு எச்சிலை உமிழ்கிற காரியம் என்பதை உணர்க!

இப்படிக்கு,
தமிழ் நலன் விரும்பி