Monday, October 24, 2011

பசி

பசிக்கிறதா என்று கேட்டவனெலாம்
பந்திக்கு அழைக்கிறான்
வெறும் தேகப்பசி என்றால்
முந்தி இருக்கலாம்

எனக்கோ
உணர்வுப் பசி அதை உணரப் பசி
உலகப் பசி அதை ஆழப் பசி

அறிவுப் பசி அதை அடையப் பசி
சாதனைப் பசி அதை சாதிக்கப் பசி

யானைப் பசியட எனக்கு
அதை தீர்க்கும் ருசி இல்லை உனக்கு

இதை எப்படிச் சொன்னாலும்
விளங்காத மடையர்தமக்கு
விளக்கிச் சொல்லும்
விதி இல்லை என்னக்கு

1 comment:

Anonymous said...

அறிவு ஜீவிகளுக்கு இருக்கும் பசி உங்களுக்கு ஏற்பட்டபிறகு
அற்ப ஜீவிகளிடத்தில் உங்கள் பசியைக்
காட்டியது உமது குற்றமில்லையா?