Thursday, September 28, 2006

என்னவென்று சொல்வதம்மா?

அவனைக் கண்ட முதல் நாள்
ஏனோ சலனப்பட்டது என் இதயம்
ஒரு முறை அவனைத்
திரும்பிப் பார்க்கச் சொன்னது என் கண்கள்

புன்னகைத்தான் வெட்கப்பட்டேன்
அருகில் வந்தான் நெருங்கத் துடித்தேன்
காதல் என்றான் மயங்கி நின்றேன்
கைபிடித்தான் கனவுகள் கொண்டேன்

காதலின் மொழி பேசி
அழகாய் என்னைக் காதலி என்றான்
ஏனென்று கேட்காமல்
என்னவனே நீ என்றேன்

உன்னோடு மட்டுமே என் உறவென்றான்
நீ இல்லையேல் நான் வெரும் உடலென்றான்
உடலென்றும் உயிரென்றும் இருதுருவம் ஏனென்றான்
ஒன்றாகி உறவாடி கலந்ததில் சுகமென்று மாயம்செய்தான்

அவன் நிழலைக்கூட
காதலித்த எனக்கு இன்று
நிஜத்தைத் தேடி அலைகையிலே
என் நிழலைத் தொலைத்த காயம்

நாட்கள் மாதங்களாய் ஓடியது
இதயம் வடித்த இரத்தம்
என் கருவறையில்
விதையாய் வளரக் கண்டேன்

காதலின் மயக்கத்தில்
பெண்மையை அள்ளிக் கொடுத்த எனக்கு
காலம் சுமையானது
வெருப்பென்னும் துவர்ப்பு சுவையானது

உயிரை இழந்துவிடலாம் என்று
உள்ளம் வாதிட்டது என்ன செய்வேன்
கொலை செய்வது போல்
கூனிக் குறுகியது என் மானுடம்

ஊரை மாற்றினேன்
என் பேரை மாற்றினேன்
மறைந்தான் கணவன் என்று
பொய்யாய் வேடம் தறித்தேன்

இத்தனை பொய்களும்
அத்தனை வேஷங்களும்
வீங்கிக் கொண்டிருந்த
என் வேதனையை மறைக்கவில்லை

மசக்கை மயக்கமில்லை
மாங்காய் சுவைக்கவில்லை
பசியென்று புசிக்கவில்லை
பாவம் பயிரென்று உரமிட்டேன்

வளரும் பிறை கண்டு வாடினேன்
தளரும் நடை கண்டு நாட்கள் எண்ணினேன்
ஏனோ கடனென்று இந்த
உயிரைச் சுமக்கலானேன்

அம்மா என்று என் முகம் காண
முட்டிக் கொண்டு வெளியே வந்தாள்
தொப்புள் கொடி அறுத்த மறுகணம்
அவளுக்கு குப்பைத்தொட்டியைத் தேடினேன்

கட்டிய சேலையில் பத்திரமாய் சுற்றி
பதமாய் ஒரு குப்பையில்
வைத்தேன் இந்த மரகதத்தை
இதயம் கணத்தது இருந்தும் திரும்பினேன்

முதலடி எடுத்து வைத்தேன்
வீதியின் ஓராமாய் பசியென்று ஒரு பிஞ்சு
கையேந்தி கதறியது
உள்ளம் கலங்கியது என்ன செய்வேன்

இரண்டடி எடுத்து வைத்தேன்
நாய்கள் ஊளையிட்டது
காதை இறுகப் பொத்திக்கொண்டு
நடக்க முயன்றேன் கால்கள் உறைந்தது

கயவனோ காமுகனோ
ஒருவனோடு மட்டுமே களப்பின்
அதுவே கற்பு என்று பறைசாற்றும்
கலாச்சரம் சொல்லுமா நான் கற்புல்லவள் என்று

தாய்மையை இறையென்பார்
அவள் முதுமையை சுமையென்பார்
பொற்றவளை காப்பகத்தில் கைவிடும்
சமூகம் சொல்லுமா நான் தாய்யில்லை என்று

ஒருவனுக்கு ஒருத்தி என்று
கதை சொல்லும் கலாச்சாரத்தில்
பாதுகாப்பாய் காமம் செய் என்று
விளம்பரப் பேடைகள் விற்கும் அவலம்

இந்த சமுதாயத்தைக் கண்டா
நான் கூசினேன்?
என்னக்குள் இருக்கும் தாய்மையைக் கொல்லும்
இந்த விதிமுறைகள் எனக்குத் தேவையா?

காதலைப் பொய்யாக்கி
காமத்தில் என்னை களவாடியவனுக்கும்
இல்லாத இந்த பயம்
எனக்கு மட்டும் ஏன் வரவேண்டும்?

போதும் இந்தப் பொய்கள்
இனி ஓட வேண்டியவள் நான் அல்ல
தொலைய வேண்டியவள் என் மகளல்ல
இதயம் இருப்பின் சிந்திக்கும் உலகம்
இல்லையேல் வேறொரு குப்பைத்தொட்டியில்
வேறொத்தி நிற்ப்பாள் என்னைப் போல!!!



************************************************************************************

தமிழில் அனாதை என்ற வார்த்தை மிகவும் கொடுமையானது. அதிலும் பெற்ற தாயே தன் கருவை அனாதையாக்குவது சொல்லக் கூடிய அவலமல்ல..

இதற்கு என்ன காரணம்?? சமுதாயமா... அதன் சட்டங்களா.. இல்லை அவரவர் தேவைக்கேற்ப மாறும் கலாச்சாரமா?? இதுதான் கலாச்சாரம் கற்றுக் கொடுக்கும் கோட்ப்பாடுகளா?

சிந்திக்க மனமுடையோர் சிந்தியுங்கள்!!!

கன்யா

23 comments:

Syam said...

puliodharai thaan mukkiam...atha saapitutu appuramaa sindhippom...ennama eluthi irukama very touching... :-)

Syam said...

//புன்னகைத்தான் வெட்கப்பட்டேன்
அருகில் வந்தான் நெருங்கத் துடித்தேன்//

இது காதல்னு சொல்ல முடியாது infatuation...அதுனால அந்த வயசுல தப்பு ரெண்டு பேர் மேலயும் தான்னு சொன்னாலும் பாதிக்க படுவது பெண்..அதுனால சூதானமா இருந்துக்கனும்...

//கொலை செய்வது போல்
கூனிக் குறுகியது என் மானுடம்//

நம்ம பண்ணிய தப்புக்கு உலகமே பார்த்திராத அந்த பிஞ்சு குழந்தை எதுக்கு தண்டணை அனுபவிக்க வேண்டும்...

//காதலைப் பொய்யாக்கி
காமத்தில் என்னை களவாடியவனுக்கும்
இல்லாத இந்த பயம்
எனக்கு மட்டும் ஏன் வரவேண்டும்//

//போதும் இந்தப் பொய்கள்
இனி ஓட வேண்டியவள் நான் அல்ல
தொலைய வேண்டியவள் என் மகளல்ல//

இனி ஒன்னுமே இல்ல இந்த உலகத்துல அப்படினு வெறுத்து போறத விட இப்படி எதிர் நீச்சல் போடும் பக்குவம் பெண்களுக்கே உரியது...

ஒரு வார்த்தைல சொல்லனும்னா...குங்கும பொட்டு கவுண்டர் படத்துல சத்யராஜ் சொல்லுவது போல...
எல்லோரும் காதலிக்கும் போது..
சந்தோசமாவும் இருந்துக்கனும் சாக்கரதயாவும் இருந்துக்கனும்..அதுக்குனு லிமிட் தாண்ட கூடாது

உஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே :-)

Kanya said...

@syamanna...

வாங்க ஷியாமண்ணா... நினைச்சேன் இப்படி ஏதாவது சொல்லுவீங்கன்னு.. :P

இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்... எல்லாரும் சாக்கிரதையா இருக்கனும்'னு இருந்தா அப்பறம் நம்ம நாடு ஏன் AIDS'ல இரண்டாவது இடமா இருக்கு??

அதான் சாக்கிரதையா இல்லைன்னு தெரிஞ்சு போச்சு... அப்படி இருக்கும் போது.. நம்ம செயலுக்கு நாமளே பொருப்பெடுக்கலைன்னா அப்பறம் AIDS மட்டும் இல்லை.. அனாதைகள், பிச்சை எடுக்கும் பிஞ்சுகள்... பிற்காலத்தில் உடலை விற்கும் வேசிகள் இப்படி எல்லா விஷயத்திலும் நாம பஸ்ட் பிளேஸ் வாங்கிடாலாமில்ல...

இது இந்த பெண்ணும் அந்த ஆணுக்கும் கொடுக்கும் சவுக்கடி இல்லை... பலரை இப்படி கோழைகளாக்கும் சமுதாயத்தைக் கேட்கும் கேள்வி... உண்மையைவிட.. நியாயத்தைவிட.. அன்பைவிட.. மனிதாபிமானத்தைவிட... கற்பு கலாச்சாரம் பெரிசா... அப்படி அதுதான் பெரிசுன்னா நமா எல்லாரும் அப்படித்தான் ஒழுக்கமா இருக்கோமா??

Syam said...

அய்யோ அம்மா நான் சொல்ல வந்த "சாக்கரதையே" வேறா அதாவது காதல்னு வந்தா அவங்க அவங்க லிமிட்ல இருக்கனும்...ஒருத்தர ஒருத்தர் மனச புரிஞ்சுகறது தான் காதல்னு உணரனும்...அதுல என்னைக்கு நம்ம மக்கள் educate ஆகராங்களே அதுவரைக்கு இந்த அவலம் தொடரும்...நான் வரல இந்த விளையாட்டுக்கு ஆள விடு தாயே :-)

Syam said...

சாப்பிட்ட புளியோதரைக்கு அதிகமா பேசியாச்சு...மேல ஏதாவது பாத்து போட்டு குடு :-)

Kanya said...

@syamanna

கொஞ்ச நாளைக்கு முன்னாடி காதல் களப்பு'ன்னு எல்லாம் டாப்பிக்'ல பேசினோம் நியாபகம் இருக்கா??

இப்போ உலகம் மாறிகிட்டு இருக்கு... காதலிக்கிறவங்க எல்லாம் லிமிட்டோடதான் இருக்காங்கன்னோ.. இல்லை இருக்கனும்'னோ நாம சொல்ல முடியாது.. அதுவும் அவங்க அவங்க சாயிஸ்...

பிளஸ் வீட்டுல பாத்து கட்டி வெச்சா மட்டும் சீக்கிரம் ஒருத்தற ஒருத்தர் புரிஞ்சு விளங்கிடுறோமா??

ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்ற ஆள் இருக்கும்...:)

the whole point of this post is not to argue whether one shud have pre martial sex or not.. but to realize that a mistake is not an end to everything and even if it is, society is not the one to decide it....

cheers
kanya

Kanya said...

ada... extra serving puliyodarai poota poochu.. illa vera ethaavathu special'a venuma... aattukaal soup... kozhi varuval... :P

ungalukku illaathatha syamanna

G3 said...

As usual kalakiteenga kanya.. :)

//ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்ற ஆள் இருக்கும்...:)//

100% true.. :)

ambi said...

nice writeup kanya, delicate mattera ivloo azhaga handle panrathu ungalla thaan mudiyum!
i'm speechless. bnglre vanthaa sollunga. i've to get your autograph. :D

//அய்யோ அம்மா நான் சொல்ல வந்த "சாக்கரதையே" வேறா //
@syam, LOL. eley, nee adangave maatiyaa? :D

Unknown said...

kanamaanak karu... eLimaiyaana mozi... konjsam niiLamaana kavithai... niiLam thavirththirukkalaamoo?

Parameshwaran said...

Kavithai Kavithai "Premadham".

Romba azhaga solli irukinga but idhoda azhaga namma allu (K. Bagyaraj) Vethi padathula supera solli itupar. If you get a chance to watch that movie pls notice that point. what he explains

Parameshwaran said...

Actually it is "Vithi"

Porkodi (பொற்கொடி) said...

ஆஹா... கன்யா கமெண்ட் தான் பெரிசா போடுவாங்கனு தெரியும்.. பெரிய கதையயே கவிதையா சொல்லிட்டீங்களே!! அதுலயும் நாட்டாமய சீரியஸான கமெண்ட் போட வெச்சதுக்கு இந்தாங்க தங்க காப்பு :)

ஆனா சில பிழைகள் இருக்கே.. அச்சுப் பிழையா?

Syam said...

//aattukaal soup... kozhi varuval...//

பழம் வேண்டாம்னு சொல்ற குரங்கு இருக்குமா :-)

Harish said...

"இல்லையேல் வேறொரு குப்பைத்தொட்டியில்
வேறொத்தி நிற்ப்பாள் என்னைப் போல"...
Pudiya paadhai nyaabagam varudu...
Super....

KK said...

Kanya super kavithai...
//புன்னகைத்தான் வெட்கப்பட்டேன்
அருகில் வந்தான் நெருங்கத் துடித்தேன்
காதல் என்றான் மயங்கி நின்றேன்
கைபிடித்தான் கனவுகள் கொண்டேன்//
super lines...romba azhaga irukku intha lines
yeppadi than kavithai'lam yezhuthureengalo padikira yenakke kashtama irunthuchuna yezhuthina ungalukku yeppadi irunthirkum ;)

Prasanna Parameswaran said...

very good kavidhai! munna maadhiri ippa illannu nennakkaraen - atleast the babies being strewn on garbage is reduced, education evvlavu mukkiyamgardhukku idhuvum oru sirandha eduthukattu!

gils said...

kk: enna solla vareenga ;) theliva solunga..neenga nalalvarnu namma ktchiyanuku theriyum...aana nakkal adikeeganlonu sila vishamam seibavargal ninaika koodum :D

not aamai: kalkareenga....pazham thinnatha koranga...chenna oru comment piniteenga ponga.

Kanya:
wheres naan keta kavidai?

Unknown said...

aaha kavidhai kavidhai... sooperappu! :)

YadhavaKumar said...

Its really totally wonderful writing...No doubt abt that.the words u have used is simply suberb no doubt abt that..pharses and undling words r simply superb, no doubt abt that...THE THING S THIS POEM SUPPOSE TO DELIVER IN THE YEAR OF 1990 OR B4 THAT...BCZ THIS POEM IS NOT SUIT FOR CURRENT DAYZ...ANYWAY OLD S GOLD...

YadhavaKumar said...

காதலைப் பொய்யாக்கி
காமத்தில் என்னை களவாடியவனுக்கும்
இல்லாத இந்த பயம்
எனக்கு மட்டும் ஏன் வரவேண்டும்...

avan unaai kalavada villai, unn samathaduan unniden villaiyaidiullan....aathrku example unn approval...sooo nee yethurkum thuninrthu avaanudan villayaidi ulliyal...dont blame him....at the finishing tough did u ask him reg ur relATIONSHIP...TO B FRANIK U WANT TO BODY RELATIONSHIP WITH HIM....HE TOOO...THATS CONCLUSION THERE S NO POINT OF LOVE AND ALLL/.... PLZ DONT SAY URS S LOVE...

Kanya said...

@everyone,

Ungal ellaroda paratugalukkum nandri.

@dev,

Niraiya sollanum'nu vandhathunaala kavithai perisaagi irukku... publish panratha irunda edit pannuduven.. :)

@porkodi,

Thanks ma... karuthu pizhai illaiye.. nakeerar maathiri ethaaathu solidaatheenga... only spelling mistake'na next time correct panniduren...:D

@Harish,

Puthiya paathai maathiri padangal ippo varaathathu oru varutham!!

@indianangel and yadhavakumar - kuppai thotti kuzhandaigal kuranju irukku'ngurathu ennai poruthavarai oru samathanam illa... innaikkum kuzhandaigal anathai aakap paduthu.. athu kuppai thotti'la poodanum'nu illa.. abortion, anathaigal ellaame ore concept thaan...

plus, train'a ericha niraiya per saaguraanga.. aana bus'a ericha konja per thaane saaguraanga.. so bus erippu case evlovo paravaa illainnu solla mudiyuma??

@yadhavakumar:

Naan kathal punitham'nu engayume sollalaiye... kathal'nu poi solli eemaathittu oodina oru muthukelumbu illaatha kozhai intha ulagathula santhoshama irukkum poothu, oru uyirai sumakkum thairiyam irunda oru pen athai valarkkurathukku intha samuthayathin angeegaaram thevai illainnu solren.. avlothaan.. :)

Anywayz once again thanks everyone!!

Anonymous said...

Guys,
Some years back I read a 'kavithai' published in dinamalar suppliment book about celebrating Birthday in orphanage. I am looking for that now and I could not find. if any of you guys find, please post the link here.
I know this is wrong forum to ask, but still please help me.