இதுவரை வாழ்ந்த உறவுகளின்
வலிமை தெரியவில்லை
என்றோ விட்டுச் சென்ற வரவுகளின்
வேதனை முடியவில்லை
காதலைக் கண்டிருக்கிறேன்
தோல்வியின் காயங்கள் சுமந்திருக்கிறேன்
காமனின் கலை பயின்று
மோகத்தின் சூது வென்றிருக்கிறேன்
என்னைக் கொண்டவளை
நினைத்து பிரம்மித்திருக்கிறேன்
என்னோடு வந்தவளை
கொண்டாடி மோகித்திருக்கிறேன்
ஆனால் மகளே,
இன்று என்னிரு கரம் கொண்டு
உன்னை ஏந்தி நிக்கையிலே
ஓடும் குருதி அனைத்தும்
உள்ளங்கையில் உருகி நிக்குதடி
கருவாக நீ வளர்கையிலே
முன்னூரு நாள் உன் தாய் பட்ட பாடு
இன்று பற்றிய என் விரலை
நீ விட்ட ஒரு கனத்தில் நான் உணர்ந்தேன்
பிறந்த மருகனமே
பெற்றவளின் மார்பு தெரியும் உனக்கு
ஆனால் கருப்பையுடன் தினம் பேசிய என்னை
உன் தாய் சொல்லித்தான் தெரியுமோ கண்ணே
காலமெல்லாம் கண் விழிப்போன்
கண்மணியே உனைக் காண
இமை மூடும் ஒரு கனத்தில்
தொலைப்பேனோ உன் பிம்பம்
தாயவளின் அழகு கொண்டு
தாமரையாள் மேனி தந்த
உன் அழகைப் பாத்ததும்
சந்திரனும் இருண்டதம்மா
சித்திரமாய் நீ சிரிக்க
விண்மீனும் சிறைபடுமாம்
செவ்விதழ் நீ மலர
குயிலினங்கள் மௌனமாம்
புன்னையிலைப் பாதம் வைத்து
சின்னவள் நீ நடந்து வர
மயிலினங்கள் பறந்ததம்மா
மானினமும் தொற்றதம்மா
மனையாளும் பிறந்த பொன்மகளும்
என் இரு கண்களாய் கொண்டு
இனி காலமெல்லாம் அடைகாப்பேன்
என் மகளே நீ உறங்கு!!
- கன்யா
19 comments:
//ஆனால் மகளே,
இன்று என்னிரு கரம் கொண்டு
உன்னை ஏந்தி நிக்கையிலே
ஓடும் குருதி அனைத்தும்
உள்ளங்கையில் உருகி நிக்குதடி//
aaha...romba touching aa irukku....great...
//புன்னையிலைப் பாதம் வைத்து
சின்னவள் நீ நடந்து வர
மயிலினங்கள் பறந்ததம்மா
மானினமும் தொற்றதம்மா//
oru professional kavingyar look theriyuthu, Kanya...romba rasichu padichen...good work....
correct me if i get it wrong...intha kavithai appa , makalai paarthu solliyathu thaaane?
on a different note, i dont have "Arthamulla Indhumatham" as a soft copy..cassette thaan irukku...if i get soft copy, will let you know.
//முன்னூரு நாள் உன் தாய் பட்ட பாடு//
இருபது நாள் அதிகமா இருக்கே :-).
Ram,
Yes ithu oru thanthai magalukkaaga paadiyathuthaan...
naan ezhuthum poothu rasichathai vida nee rasikkum poothu ennoda kavithai innum konjam arthamullathaa thoonuthu.. nandri..
Raja...
kanakku ellam sarithaan... oru pennukulle karu uruvaagi vena athu 280 days karuppaiyil irukkalam.. aana athukku 15 - 20 naal munnadiye avaloda system karuvai protect panrathukaaga oru soozhalai avalukku erpaduthum... oru pennin udalukkul erpadum maatrangal rendu naadi thudikka aarambikirathukku munnaidye thodangidum...
so maatram erpadum natkalaiyum kanakku vecha kitta thatta 300 naal sarithaan :P
Kanya
nalla tamil padichu romba naal aachu.. superooo super.. loved each of those lines... i liked this a lot...
I am surprised by ur flow of thoughts and the way u choose the words to express the feeling. awesome.. kalakita po..
innum neriya kavidhalai ethirpaarkiraen...
http://www.tamilnation.org/hundredtamils/kannadasan.htm
try this link for "Arthamull Hindu Matham".If u find better one, do share with me.
http://www.tamilnation.org/hundredtamils/kannadasan.htm
Oops.!!
...hundredtamils/kannadasan.htm
for some reason only 'k' comes when i paste the whole site...:(
மனையாளும் பிறந்த பொன்மகளும்
என் இரு கண்களாய் கொண்டு
இனி காலமெல்லாம் அடைகாப்பேன்
என் மகளே நீ உறங்கு!!
மனதின் அடித்தளத்திலிருந்து எழுந்து மற்ற மனங்களை மயிலிரகால் தடவும் வரிகள்.
Kanya - Link yenakku theliva work aaguthu...
anyway naa thirumba link ah paste panrean keela...problem is for some reason, this comment box is trimming the tail end of the web site address :(
let me try my luck this time..
www.tamilnation.org/hundredtamils/kannadasan.htm
hmmmhem....neenga email id thaanga...will send it ...
very touching
நின் தமிழோடு விளையாடவே யாம் இங்கு வந்தோம்! அக மகிழ்ந்தோம்! பெரிய கவிதாயினியா இருப்பீங்க போலிருக்கே! எல்லாதையும் படிச்சேன். :)
குழல் இனிது! யாழ் இனிதென்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்!
நம்ம ஆளு ஒன்னே முக்கால் அடியில நச்சுனு சொல்லிட்டாரு இல்ல!
you've a good blog. pls do keep it up. :D
ரொம்ப நல்லா இருந்ததுங்க...இப்போ தான் எங்களுக்கும் ஒரு குட்டி பையன் பிறந்து உள்ளான் அதுனால அனுபவிச்சு படிக்க முடிந்தது....
அம்பி உன் ரவுசு தாங்க முடியல.. :-)
ஷியாம்,
அன்பு மகன் வரவுக்கு வாழ்த்துக்கள்.. என்னுடைய நன்பர்கள் நான்கு பேர் இப்போது தந்தையாகியுள்ளார்கள்... அதில் 3 பெண் குழந்தைகள்... அதான் பொன்மகளுக்காக கவி எழுதினேன்..
அம்பி...
வாங்க தலைவா... என் தமிழோடு விளையாட வந்தீரா...??? ம்ம்.. நடத்துமைய்யா உம் நாடகத்தை... ஆடிப் பார்க்க நான் தயார்... :P..
எல்லாரும் அம்பிக்கு ஒரு ஓ போடுங்கப்பா....
அனிதா,
வந்து போனதுக்கு நன்றி... அப்பப்போ வந்து போங்க
தி.ரா.ச சார்..
உங்கள மாதிரி பெரியவங்க ஊக்கம் கொடுக்கும் போது ஒரு புது வேகமே வருது!! ரொம்ப நன்றி..
ராம்,
எனக்கு இவ்வளவு ஊக்கம் கொடுக்குறீங்க... நன்றி
ஆனந்து...
தாங்க்ஸ்டா மாப்பிள... வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்ற அளவுக்கு எடுத்து விடுறேன் கவிதையா.. :P
எல்லாருக்கும் நன்றி... இனியும் உங்க கருத்துக்களை ஊக்கத்தை கொடுத்துகிட்டே இருங்க..
//ஆடிப் பார்க்க நான் தயார்... //
he hee, periya thillana mohanaambal padmininu nenapoo? LOL.
(just kidding).
neshtu poshtu pls.. :)
@ambi..... yeeen... thillaana mohaanaangi aadinaathee paapiyaloo... intha jillu aadinaa paaka maateeyalooo... :P (I am not kidding.. :P)
adutha post'a... pootutta poochu... :)
hmm...
பிறந்த மருகனமே
பெற்றவளின் மார்பு தெரியும் உனக்கு
ஆனால் கருப்பையுடன் தினம் பேசிய என்னை
உன் தாய் சொல்லித்தான் தெரியுமோ கண்ணே///
just touchy
un kavidhaigal nalla junior appakkalai thotirukkiradhu idhu nalla senior appakkalai uruvakka en vazhthukkal
Very very very super.
Unmaiyana oru aan magan yeppadi irukkanumunu naan ninaithathai neengal azhagaga solli yirukkireerkal.
Thank you, Thank you very much.
Prabu. J
Post a Comment